தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சில தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கொரோனா தடுப்பூசி (2டோஸ்) போட வேண்டியது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 300 தொழிலாளர் பணிபுரியும் அல்லது 10000 சதுர அடி பரப்பு கொண்ட தொழிற்சாலைகள் தகுதி வாய்ந்த சுகாதார ஆய்வாளர் ஒருவரை பணியமர்த்தி, கொரோனா விதிமுறைகள் தொழிற்சாலைகளில் முறையாக கடைபிடிப்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.