ரேஷன் அட்டைதாரர்களுக்கு புது விதிமுறைகளை மத்திய அரசானது வெளியிட்டு இருக்கிறது. அரசின் இலவச ரேஷன் வசதியை தகுதியற்ற பல பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்கும் அடிப்படையில், அரசு புது விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. அத்துடன் புது வழிமுறைகளை கடைபிடிக்காத பயனர்களின் ரேஷன்அரட்டை ரத்துசெய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புது வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், இலவச ரேஷன் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளும் அனைவரும் அவர்களின் வெரிபிகேஷனை மேற்கொள்ள வேண்டும். இதற்கென 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. வெரிபிகேஷனில் தாங்கள் தகுதியானவர் இல்லை என்று கண்டறிந்தால் உங்களது ரேஷன் அட்டை ரத்துசெய்யப்படும்.
ஆகவே தகுதியில்லாத ரேஷன்அட்டைகளை அரசு ரத்து செய்கிறது. அதன்படி இதுவரையிலும் சுமார் 2கோடியே 41 லட்சம் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த அட்டைகளில் பெரும்பாலானவை உ.பி.யில் ரத்துசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.