நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும் தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளனர்.
இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிகவேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மரபணு ஆய்வு கூடத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இனி தமிழகத்தில் உறுமாறிய கொரோனா தொற்று தொடர்பான ஆய்வுகளை வெளியிட முடியும். உருமாறிய வைரஸ்களை கண்டறிய மரபணு பகுப்பாய்வகம் அவசியமாகும். இத்தகைய மரபணு பகுப்பாய்வகம் எந்த ஒரு மாநில அரசாலும் இதுவரை அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் தான் முதல் முறையாக அமைக்கப்படுகிறது.