நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக மின் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கான மின்தடை நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உட்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதற்காக அந்த பணி நடக்கும் இடங்களில் உள்ள மின் இணைப்புகளில் காலை முதல் மாலை வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த மின்தடை குறித்த விவரம் மின் வாரியம் சார்பில் பொது மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பிப்.19-ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.
இதனால் தமிழகம் முழுவதும் எந்த இடத்திலும் மின் தடை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக தேர்தல் முடியும் வரை மின் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கான மின் தடை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மின் தடை அறிவிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது
குறிப்பு: அறிவிக்கப்படாத மின்தடை பற்றிய புகார்களுக்கு 1912 என்ற எண்ணுக்கு அழைத்து எப்போது வேண்டுமானாலும் புகாரளிக்கலாம். அதுமட்டுமின்றி 9445850811 என்ற வாட்ஸ்அப் எண் மற்றும் 044-28521109, 044-28524422 என்ற தரைவழி எண்களிலும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.