Categories
மாநில செய்திகள்

இனி தமிழக கோவில் திருவிழாவில் நாடகம் நடத்த…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

மதுரை மாவட்டம் முதலைகுளம் பகுதியில் கருப்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், உசிலம்பட்டி அருகில் திருவிழாவின்போது கலைநிகழ்ச்சிகள், ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த மனுவை சென்ற வாரம் விசாரணை மேற்கொண்ட தனிநீதிபதி, ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்துவதற்கு நிபந்தனைகள் விதித்து அனுமதியளித்தார்.

அவற்றில் ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்தும்போது ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்களை அனுமதிக்ககூடாது எனவும் நிகழ்ச்சிகளை இரவு 8 மணி முதல் இரவு 11 மணிவரை மட்டுமே நடத்திக்கொள்ளலாம் எனவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் மனுதாரர் தரப்பில் நாடகங்கள் நடத்துவதற்கு இரவு 8 மணி முதல் 11 மணி வரையிலும் நேரம் போதாது. ஆகையால் இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணிவரை நடத்த நேரத்தை நீட்டித்து தர அனுமதி வழங்க வேண்டும் என்று 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்து இருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன், விஜய குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரவில் நாடகங்கள் நடத்த இருப்பதால் நேரத்தை அதிகரித்து அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்து இருந்தார். அதனை பரிசீலனை செய்து ஏற்றுக் கொண்ட நீதிபதி இரவு 10 மணிமுதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை நாடகம் நடத்திக்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு கோயில் திருவிழா குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |