தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்குவது பற்றி அரசு பரிசீலனை செய்யும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வெள்ள சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் சங்கம் மற்றும் பனைத் தொழிலாளர் நல வாரியம் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்கும்போது நலிவடைந்து இருக்கும் பனைத்தொழில் எழுச்சி பெறும்.
அதுமட்டுமன்றி மக்களுக்கும் சாதாரண பொருள் மானிய விலையில் கிடைக்கும் என பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை முன்வைத்தனர். இந்த நிலையில் இந்த கோரிக்கையை ஏற்று ரேஷன் கடைகளில் பனங்கருப்பட்டி களை வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.