தமிழ்மொழித் தாளின் 45 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது தேர்வு விடைத்தாள்களை திருத்துவது குறித்து டிஎன்பிஎஸ்சி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தால் கட்டாயமாக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை புதிய முறையில் நடத்த தேர்வாணையம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்மொழித் தாள் தேர்வில் 45 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பிற விடைத்தாள்களைத் திருத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய திருத்தங்கள் மேற்கொள்வதற்கான கருத்துருக்கள் தேர்வாணையத்தின் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் அக்டோபர் மாதம் தேர்வு குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.