டுவிட்டரில் நிறைய வேடிக்கையான விஷயங்கள் தொடர்ந்து நடைபெறும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
பிரபல சமுக ஊடகமான டுவிட்டரை கடந்த சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க் வாங்கினார். இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் பல அமைச்சர்களின் டுவிட்டர் பக்கங்களில் அதிகாரப்பூர்வ முத்திரை ஒன்று புதிதாக தோன்றியுள்ளது. இதனை பார்க்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது பல இந்திய அரசாங்க அமைப்புகளின் டுவிட்டர் பக்கங்களில் அதிகாரப்பூர் முத்திரை ஒன்று காணப்பட்டது. குறிப்பாக பிரதமர் அலுவலகம், பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ twitter கணக்கு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கணக்கு ஆகியவற்றில் இந்த முத்திரைகள் காணப்பட்டது. இது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியதாவது. இனி வரவிருக்கும் மாதங்களில் நாங்கள் பல முட்டாள்தனமான விஷயங்களை செய்வோம்.
மேலும் நிறைய சோதனைகளையும் செய்வோம். அந்த சோதனைகளில் எது சரியாக செயல்படுகிறதோ அதை வைத்துக்கொண்டு சரியில்லாததை மாற்றுவோம். மேலும் புகார் புகார் ஹாட்லைன் ஆபரேட்டர் ஆன்லைனில் இருக்கிறார். நீங்கள் உங்கள் புகார்களை கீழே குறிப்பிடவும் என கூறினார். இதனையடுத்து டுவிட்டர் நிர்வாகி எஸ்தர் க்ராபோர்ட் கூறியதாவது. ப்ளூ சந்தாதாரர்கள் மற்றும் அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட டுவிட்டர் கணக்குகளை எவ்வாறு வேறுபடுத்துவது என்று பலர் கேட்டுள்ளனர்.இதனால் சரிபார்க்கப்பட்ட டுவிட்டர் கணக்குகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட புளு டிக் அடையாளத்திற்கு பதிலாக சில கணக்குகளுக்கு அதிகாரப்பூர் முத்திரை ஒன்றை அறிமுகப்படுத்துகிறோம். இந்நிலையில் அரசு கணக்குகள், வணிக நிறுவனங்கள், வணிக கூட்டாளர்கள், முக்கிய ஊடகங்கள், வெளியிட்டார்கள் மற்றும் பொது நபர்கள் ஆகியவற்றிற்கான அதிகாரப்பூர்வ twitter பக்கங்களில் அதிகாரப்பூர் முத்திரை குறிப்பிடப்படும் என அவர் கூறியுள்ளார்.