அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களினுடைய மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும், புத்துணர்ச்சி பெறுவதற்காகவும் அரியானா மாநில அரசு அதனுடைய அனைத்து துறைகள் வாரியங்கள் மற்றும் கார்ப்பரேஷன்களுக்கு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதில் யோகாவை ஊக்குவிக்கும் விதமாக அரசு பணியிடங்களில் நாள்தோறும் 15 முதல் 20 நிமிடங்கள் யோகா இடைவேளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. அதன்படி ஒய்-பிரேக் செயலியை தங்களுடைய அலுவலகங்களில் செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஹரியானா மாநில அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இந்த உத்தரவுப்படி அனைத்து துறைகள் வாரியங்கள் மற்றும் கார்ப்பரேஷன்கள் தங்களுடைய அலுவலகங்களில் ஒய்-பிரேக் செயலி மூலமாக யோகா பயிற்சியை தங்களுடைய ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தபடுத்த வழிமுறைகளை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக தனிநபர்கள் தங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், புதுப்பித்துக் கொள்ளவும், ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்யவும் முடியும் என்று நிரூபணமாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.