மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக நான்காவது மாநில மாற்றுத்திறனாளிகள் மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி திடலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் மு க ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் மீது அன்பு கொள்ள வேண்டும். தேவையான வசதிகளை அவர்கள் கேட்காமலேயே செய்து தர வேண்டும் என்பது கருணாநிதி அவர்கள் வகுத்த பாதை. மாற்று திறனாளிகள் என்ற சுயமரியாதை சூட்டியவர் கருணாநிதி அவர்கள். திமுக அரசு அமைந்தவுடன் ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்களை ஒதுக்கினேன். ஆனால் மாற்றுத்திறனாளிகள் துறையை மட்டும் கருணாநிதி போல தானே வைத்துக் கொண்டேன்.
அதன் மூலமாக என்னுடைய விருப்பங்களை செய்து கொடுக்க விரும்பினேன். 15 மாதங்களில் 759 கோடி மதிப்பிலான எண்ணற்ற நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக இந்த அரசு செய்து கொடுத்திருக்கிறது. தமிழ் நாட்டை நிரந்தரமாக ஆளப்போவது திமுகதான் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக கூறியுள்ளார். சென்னையில் மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் பேசிய அவர், “அனைத்து மக்களுக்கான நல்லாட்சியை திமுக அரசு நடத்தி வருகிறது. மக்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும். இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளப்போவது திமுதான். சில திமுகமீது தேவையில்லாத அவதூறுகளை பரப்பி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். இதைப் பற்றி உங்கள் கருத்து