Categories
மாநில செய்திகள்

“இனி திமுக மட்டும் தான்” மத்திய அரசுக்கு எதிராக எங்கள் போர்குணம் வெளிவரும்….. உதயநிதி ஸ்டாலின் அதிரடி…..!!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆன கருணாநிதியின் நேர்காணலில் இருந்து எடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்களை எடுத்து “திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்” என்ற நூலை திமுகவைச் சேர்ந்த எம்பி எழிலரசி எழுதியுள்ளார். இவர் எழுதிய நூலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா அறிஞர் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட அதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் இனி வருகிற தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று கண்டிப்பாக ஆட்சியை கைப்பற்றியே  தீரும். அதை யாராலும் தடுக்க முடியாது. திமுகவின் போர் குணம் குறைந்துவிடவில்லை. அது என்றைக்குமே குறையாது. தமிழகத்தின் உரிமைகள் மத்திய அரசால் பறிக்கப்பட்டாலோ அல்லது பழிவாங்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் திமுகவின் போர் குணம் கண்டிப்பாக வெளியே வரும் என்று எச்சரித்துள்ளார்.

Categories

Tech |