Categories
மாநில செய்திகள்

இனி திருப்பதிக்கு தினசரி சுற்றுலா…. பக்தர்களுக்கு தமிழக அரசு செம ஹேப்பி நியூஸ்….!!!!!

திருப்பதி தினசரி சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது திருச்சி, மதுரை,சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வருகின்ற ஆகஸ்ட் எட்டாம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளது. தமிழகத்தில் முதல்வர் வழிகாட்டுதலின்படி சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் தற்போது செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவை பொதுமக்களின் ஆதரவோடு மிக சிறந்த முறையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்கி வருகின்றது. இந்த சுற்றுலாவை தமிழகத்தில் உள்ள மிக முக்கிய நகரங்களில் இயக்குவதற்கு முடிவு செய்து அதன் தொடர்ச்சியாக திருச்சி, மதுரை,சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி அறிமுகம் செய்கிறது.

இந்த சுற்றுலாவில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் இரண்டு வேளை சைவ உணவு மற்றும் குளிர்சாதன சொகுசு பேருந்து வசதி, சிறப்பு தரிசன பயண சீட்டு உட்பட கட்டணமாக திருச்சி, சேலம் -பெரியவர்களுக்கு 33000 ரூபாய், சிறியவர்களுக்கு 3000 ரூபாய், மதுரை பெரியவர்களுக்கு 4000 ரூபாய், சிறியவர்களுக்கு 3700, கோயம்புத்தூர் பெரியவர்களுக்கு 4000 ரூபாய் மற்றும் சிறியவர்களுக்கு 3700 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவில் பயணம் செய்ய ஏழு நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.

இச்சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு:

மேலாளர், ஒட்டல் தமிழ்நாடு – திருச்சி 0431-2414346, 9176995862 மேலாளர், ஒட்டல் தமிழ்நாடு – சேலம் 04281-22335, 223334, 9176995823 மேலாளர், ஓட்டல் தமிழ்நாடு – மதுரை 0452-2337471, 9176995822 மேலாளர், ஒட்டல் தமிழ்நாடு – கோயம்புத்தூர் 0422-2302176, 9176995852.

Categories

Tech |