Categories
மாநில செய்திகள்

“இனி திருப்பதியைப் போன்று தமிழகத்திலும்”…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடைந்து விட்டது. இந்த ஒரு வருட காலத்தில் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் திருப்பதி கோவிலை போன்ற நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நேற்று திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பதி கோவிலில் கடைபிடிக்கப்படுகின்ற தூய்மை,வரிசை நடைமுறை மற்றும் அபிஷேகங்கள் ஆகியவற்றை தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய கோவில்களிலும் அறநிலையத்துறை விரைவில் நடைமுறைப்படுத்த இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |