திருமண விழாவின் போது மண்டபங்களில் முக கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்..
தமிழத்தில் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.. இருப்பினும் 3ஆவது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.. அந்தந்த மாவட்ட அரசு, பொதுவெளியில் அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும், கொரோனா தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும் என்று விழிப்புணர்வையும், அறிவுறுத்தலையும் கூறி வருகிறது.. இதற்கிடையே திருமண விழாக்களில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றாமல் முகக்கவசம் அணியாமல் மக்கள் அனைவரும் அலட்சியமாக இருக்கின்றனர்.. இதனால் கொரோனா பரவும் சூழல் நிலவுகிறது..
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.. அதாவது, திருமண மண்டபத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் இருந்தால் நிகழ்ச்சி வீட்டாருக்கும், மண்டபத்திற்கும் அபராதம் விதிக்கப்படும்.. தனி குழுக்கள் அமைக்கப்பட்டு திருமண விழாவில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என கண்காணிக்கப்படும்.. திருமண நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்க்கும் போது மாஸ்க்கை அகற்ற வேண்டாம் என்றும் கூறியுள்ளார்..