Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி திறக்க கூடாது…. உடனே மூட வேண்டும்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் வ.உ.சி மார்கெட்டில் உள்ள வியாபாரிகள் 4 பேருக்கு தொற்று பரவியதால் மார்கெட்டை மூட ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள வ.உ.சி மார்க்கெட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் தற்போது சேலம் பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிக மார்கெட் செயல்பட்டு வருகின்றது. அந்த மார்கெட்டில் காய்கறிகள், பூக்கடைகள் என 300-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக காய்கறிகளை கொண்டு வந்து மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர்.

இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்த போது மார்கெட்டிலுள்ள வியாபாரிகள் 4  பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் சேலம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மார்க்கெட்டில் உள்ள மற்ற வியாபாரிகளுக்கு தொற்று பரவாமல் இருக்க மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் மார்கெட்டை மூட உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |