தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்படும் என வெளியாகிய தகவல் தவறானது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகியது.
அந்த தகவல் தவறானது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்து முதல்வரிடம் நாளை மறுநாள் அறிக்கை தரப்படும் என்றும், அதன் பிறகு ஐந்து நாளில் பாடத் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.