தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் சிறப்பு விருந்தினர்கள் வெறுப்பு பேச்சை பேச அனுமதிக்க கூடாது என நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
தொலைக்காட்சி சேனல் தொகுப்பாளரின் பங்கு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் ஹிரிஷிகேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது. ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளரின் பங்கு என்பது மிகவும் முக்கியத்துவம் ஆனது. மேலும் அவரது பணி சிக்கல் நிறைந்தவைகள் ஆகும். ஏனென்றால் ஒரு நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக வந்துள்ள நபர்கள் வெறுப்பு பேச்சை பேச தொடங்கினால் அவற்றை தடுப்பது தொகுப்பாளர்களின் கடமை.
ஊடகம் அல்லது சமூக ஊடகம் ஆகியவற்றில் வெளிவரக்கூடிய இது போன்ற பேச்சுக்கள் ஒழுங்குபடுத்தப்படாமல் உள்ளது. மேலும் வெறுப்பு பேச்சுகளுக்கு இடம் கொடுக்கும் தொலைக்காட்சி சேனல்கள் எவ்வித தடைகளும் இன்றி தப்பி விடுகிறது. இந்த விசயத்தில் தமிழக அரசு உண்மையான பார்வையாளர்களாக இருக்கிறது என்று கேள்வி அளித்துள்ளனர்.