Categories
தேசிய செய்திகள்

இனி தொலைந்து போன பான் நம்பரை…. எளிதில் ஆதார் மூலம் கண்டுபிடிக்கலாம்….. எப்படி தெரியுமா….????

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வருமானம் தொடர்பான அனைத்து விவரங்களையும் மேற்கொள்ள பான் அட்டை கட்டாயம் தேவை. பான் கார்டு இல்லை என்றால் வங்கியில் பண பரிவர்த்தனை கூட செய்ய முடியாது. நம்முடைய வருமான வரி தாக்கல் மற்றும் ரிட்டன்ஸ் முதல் அன்றாட அனைத்து பயன்பாட்டிற்கும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த பான் கார்டு எண் அல்லது அட்டையை தொலைத்து விட்டால் அதனை ஆதார் மூலமாக மீண்டும் தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு முதலில் https://tamilanpan.in/portallogin/register.php என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று உங்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட விவரங்களையும் கொடுத்து ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். பின்னர் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி பதிவு செய்தால் தான் Registration செய்ய முடியும். அதன் பிறகு நம்முடைய பான் கார்டு எண்ணை கண்டுபிடிக்க https://tamilanpan.in/portallogin/login.php என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று லாகின் செய்து கொள்ள வேண்டும். அதில் Dashboard பகுதியில் pan find management என்பதை கிளிக் செய்யும்போது அதில் pan find new என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் ஆதார் அட்டையில் உள்ளது போல், உங்கள் பெயர், பிறந்த தேதி, ஆதார் நம்பர் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். இதற்காக  50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை நாம் அதில், கொடுக்கப்பட்டிருக்கும் ஆன்லைன் முறையில் செலுத்திக் கொள்ளலாம். பிறகு SUBMIT கொடுக்கும் போது வரும் திரையில், உங்கள் பான் விவரங்கள் அனைத்தும் காண்பிக்கப்படும்.

Categories

Tech |