ஏடிஎம் மூலமாக தங்கம் வாங்கும் வசதி இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்தியர்களுக்கு மிகவும் விருப்பமான பொருளாக தங்கம் தற்போது இருந்துவருகிறது. தங்கத்தை வைத்திருப்பது கௌரவமாக பார்க்கப்படுகின்றது. அதுமட்டும் இல்லாமல் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதில் செய்யும் முதலீட்டால் லாபம் அதிகமாக கிடைக்கின்ற.து தங்கத்தை பொதுவாக நாம் கடைகளில் வாங்குவோம். தங்க நகை வாங்குவதற்காக நகை கடைகளில் ஏறி இறங்கி வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இந்நிலையில் ஏடிஎம்மில் பணம் எடுப்பது போல இனி ஏடிஎம் மிஷினில் தங்கத்தை எடுக்கும் வசதி இப்போது முதன் முதலாக ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
கோல்ட் சிக்கா லிமிடெட் நிறுவனம் சார்பாக இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. வங்கி ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக இந்த மெஷினில் தங்கத்தை வாங்க முடியும். இந்த நிறுவனம் தரப்பில் இருந்து தங்கத்தை வாங்க பிரிபெய்டு போஸ்ட்பெய்டு கார்டுகள் வழங்கப்படுகின்றன. தங்கத்தை வினியோகிக்கும் ஏடிஎம் சேவைக்காக இந்த நிறுவனம் என்ற டேட்டாவேர் எல்.எல்.பி. நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது, இந்தியாவில் தங்கத்திற்கான ஏடிஎம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இன்னும் ஒரு ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 3000 ஏடிஎம் நிறுவ இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.