நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாக பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தெரிவித்துள்ளார். இவர் நடித்துள்ள புல்லட் ட்ரெயின் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது அவர் தெரிவித்ததாவது: “கடந்த 30 வருடமாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். அதிகமாக உழைத்து விட்டேன். இனி எனக்கு ஓய்வு தேவை. தொடர்ந்து என்னால் நடிக்க முடியும் என்றாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு புதியவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குவது தான் நல்லது” என்று அவர் தெரிவித்துள்ளார் .இதைக் கேட்ட அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Categories