Categories
உலக செய்திகள்

இனி நடுக்காட்டுல கூட சிக்னல் பிரச்சனை இருக்காது…. எலான் மஸ்க் போட்ட பலே திட்டம்…..!!!!

ஸ்டார்லிங்க் V2 என்ற புதிய தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.இதன் மூலம் தொலைபேசி சிக்னல்கள் நேரடியாக சேட்டிலைட்டில் இருந்து மொபைல் போன்களுக்கு வந்து சேரும். அருகில் டவர் இல்லாமல் ஏற்படும் சிக்னல் குறைபாட்டை இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சரி செய்ய முடியும். இதனால் நடுக்காட்டிலும் கூட மொபைல் போனில் பேசலாம்.

ஸ்டார் லிங்க் என்பது நமக்கு இணையம் வழங்க போகும் புதிய திட்டம் ஆகும். உலகம் முழுக்க கடலுக்கு அடியில் கேபிள் மூலமே இணையம் வழங்கப்பட்டு வருகிறது. பிராட் பேண்ட் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. டவர்கள் மூலம் போன்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் டிஷ் போல நேரடியாக வீட்டில் டிஷ் வைத்து இணையத்தை சாட்டிலைட் மூலம் பெறும் வசதி கிடையாது. ஆனால் ஸ்டார் லிங்க் பயனாளிகள் வீட்டில் டிஷ் வைத்து இணையத்தை பெற முடியும்.

Categories

Tech |