Categories
தேசிய செய்திகள்

இனி நண்பர்களின் நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டை பயன்படுத்த முடியாது?…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

நண்பர்களின் நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி இதுவரையிலும் திரைப்படங்களைப் பார்த்து பயன்பெற்று இருப்பீர்களேயானால், அது 2023ம் வருடம் துவக்கத்தில் இயலாமல் போகலாம். 2023ம் ஆண்டு துவக்கத்தில் இருந்து நெட்ஃபிளிக்ஸ் பயனாளர்கள் தங்களது பாஸ்வேர்டுகளை பிறருடன் பகிர்ந்துகொள்ள தனியே கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் அந்நிறுவனம் தன் பங்குதாரர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச்சொல் பகிர்வதை தடுக்கக்கூடிய திட்டத்தை நெட்பிளிக்ஸ் சென்ற மார்ச்மாதம் அறிவித்தபோது, மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது.

இந்த நிலையில் தன் வீட்டைத் தவிர்த்து, கடவுச் சொல்லை பிறருடன் பகிர்ந்துகொள்ள கூடுதலாக கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த இருப்பதாக இந்த வாரம் தெரிவித்திருந்தது. நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டைத் தவிர்த்து குடும்பத்தினர் (அ) நண்பர்களுக்கு கடவுச்சொல்லை பகிர்ந்துகொள்ளவேண்டும் எனில், அதற்காக இணை கணக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டியது வரும் என குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே கடவுச் சொல்லை பகிர்ந்துகொள்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறையை, கோஸ்டா ரிகா, சிலி, பெரு உள்ளிட்ட நாடுகளில் இந்த வருடமே அறிமுகம் செய்துவிட்டது. அந்த வகையில் கூடுதலாக 2.99 டாலர் கட்டணம் செலுத்தி ஒரு வாடிக்கையாளர், 2 பேருடன் தன் கடவுச் சொல்லைப் பகிர்ந்துகொள்ளலாம். இதரநாடுகளுக்கு எவ்வளவு கட்டணம் என்பது பற்றி நெட்பிளிக்ஸ் இன்னும் அறிவிக்கவில்லை.

Categories

Tech |