இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி வீதத்தை மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் மே 7 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகமான வட்டி வழங்கப்படுகிறது. பொதுவான வாடிக்கையாளர்களுக்கு குறைந்த பட்சமாக 3 சதவீத வட்டியும், அதிக பட்சமாக 5.2 5% வட்டியும் வழங்கப்படுகிறது.
புதிய வட்டி விகிதம்:
7 – 14 நாட்கள் : 3%
15 – 29 நாட்கள் : 3%
30 – 45 நாட்கள் : 3%
46 – 90 நாட்கள் : 3.25%
91 – 179 நாட்கள் : 4%
180 – 270 நாட்கள் : 4.5%
271 நாட்கள் – 1 ஆண்டு : 4.5%
1 ஆண்டு : 5.1%
1 ஆண்டு – 2 ஆண்டு : 5.1%
2 ஆண்டு – 3 ஆண்டு : 5.1%
3 ஆண்டு – 5 ஆண்டு : 5.25%
5 ஆண்டு – 10 ஆண்டு : 5.25%