தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். மேலும் மக்களை கவரும் வண்ணம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் திடீரென்று அரசியல் கட்சியினர் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. இதில் மநீம பொருளாளர் வீட்டில் கணக்கில் காட்டாத பணம் சிக்கியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல், “நீீட் தேர்வுக்கு பதிலாக ‛சீட்’ தேர்வு நடத்தப்படும் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.