அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவிவிலக போவதைத் தொடர்ந்து 15 பேருக்கு மன்னிப்பு வழங்க உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் அனைவரும் எதிர்பார்த்ததற்கு ஏற்ப ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோபிடன் தான் வெற்றி பெற்றுள்ளார். ஏனென்றால் தற்போது அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் பதவி வகித்த நாளிலிருந்தே பல சர்ச்சைகள் தான் ஏற்பட்டு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் கொரோனோ காலகட்டங்களில் சரியான அணுகுமுறையை அவர் கடைப்பிடிக்கவில்லை என்றும் அவ்வாறு செய்திருந்தால் அதிக அளவில் கொரோனா அமெரிக்காவை தாக்கி இருக்காது என்று அமெரிக்க மக்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அடுத்த மாதத்தில் ட்ரம்ப் பதவி விலக உள்ளார். இதனால் அவர் தன் கட்சியில் உள்ள 15 நபர்களுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார். இதில் எம்பிக்களும் அடங்குவர். இதனால் இவர்களின் தண்டனை ரத்தாகி விடுதலை செய்யப்படுவார்கள். மேலும் ஐந்து நபர்களின் தண்டனையை குறைப்பதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தண்டனையை குறைக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது.
இதனை தொடர்ந்து இனி வரும் நாட்களிலும் இன்னும் சில பேருக்கு ட்ரம்ப் மன்னிப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த அறிவிப்புக்கு முன்னர் டிரம்ப் 27 பேருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார். அவருக்கான அதிகாரத்தில் இரண்டு சதவீதத்தை மட்டுமே அவர் உபயோகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னாள் அதிபராக இருந்த பராக் ஒபாமா 212 நபர்களுக்கு மன்னிப்பு வழங்கி தனது அதிகாரத்தில் 6 சதவீதத்தை உபயோகப்படுத்தியுள்ளார். மேலும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் 7 சதவீத அதிகாரத்தை பயன்படுத்த 180 பேருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.