இனி மக்களுக்கு பிடிக்கும் வகையில் நடிப்பேன் என விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் பூரி ஜெகந்த் நாத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லிகர். இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற சைமா 2022 விருது வழங்கும் விழாவில் விஜய் தேவர கொண்டாவிற்கு யூத் ஐகான் ஆப் சவுத் இந்தியன் சினிமா என்ற விருது வழங்கப்பட்டது.
அப்போது பேசிய அவர் கூறியதாவது, நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் நம் அனைவரது வாழ்விலும் வரும். நம் வாழ்வில் மிக மோசமான நாட்களை கடந்திருப்போம். அதில் இருந்து எப்படி மீண்டும் வருகின்றோம் என்பதை வாழ்க்கையில் முக்கியமானது. நான் இங்கு விருது வாங்குவதற்காக வரவில்லை. உங்களிடம் பேசுவதற்காக வந்திருக்கின்றேன். இனி எனது பணியை சிறப்பானதாக செய்வேன். மக்களுக்கு பிடிக்கும் வகையில் நான் நல்ல திரைப்படங்களில் இனி நடிப்பேன். நிச்சயம் இனி நான் தேர்வு செய்யும் திரைப்படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்பதை கூறுவதாக பேசி இருக்கின்றார்.