தமிழ் மற்றும் மலையாள படங்களில் விமர்சன ரீதியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை திவ்யா நாயர். இவர் தசராவை முன்னிட்டு நடன ஆசிரியராக முடிவெடுத்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரதநாட்டிய கலை நுணுக்கத்தை அறிந்த நாயகியாக அறியப்பட்ட நடிகை தெரிவிக்கையில் கலைத்துறையில் ஈடுபாடு பெற வேண்டுமானால் ஸ்ரீ ராஜமாதங்கி தேவியை மனமுருகி வழிபட வேண்டும். அத்தகைய நாளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு நான் புதிய வகுப்புகளை தொடங்கியுள்ளேன்.
இவர்களுக்கு விநாயக பெருமானும் நடராஜ பெருமானும் ஒளிமயமான எதிர்கால அமைய ஆசீர்வதிக்கட்டும். அதனை தொடர்ந்து இந்த தருணத்தில் முக்கியத்துவத்தின் மகத்துவத்தை எடுத்துரைத்த எனது குரு என்னை கற்பிக்க தொடங்க சொன்னது போல், எனது வாழ்க்கையில் பயணத்தை தொடங்கியுள்ளேன். மேலும் எனது குருவால் கற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து கலைகளையும் என்னால் முடிந்த வரையில் மாணவர்களுக்கும் கற்று தருவேன். எல்லாம் வல்ல இறைவனுக்கு எனது நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.