உதயநிதி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணத்தையும், பாதுகாப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது, “எனக்கு இன்று வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி. மேலும் பலரும் வாரிசு அரசியல் என விமர்சித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு நான் எனது செயல்களின் மூலம் பதில் அளிப்பேன். மேலும் நமது மாநிலத்தை விளையாட்டின் தலைநகரமாக மாற்றுவேன். இதனால் இனிமேல் நான் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை. மேலும் கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்திலிருந்து விலகுகிறேன். இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜின் மாமன்னன் படமே எனது கடைசி படம் என அவர் கூறியுள்ளார்.