மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வருகை புரிந்த வைகோ மற்றும் அவரது மகன் துரை வையாபுரி அவர்களுக்கு மதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் வழங்கி ஆசி வாங்கினார். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் வீரவாள் பரிசாக கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதிமுகவினருக்கு ஒரு புதிய உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே இனிமேல் மதிமுகவானது நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறி செல்லும். மேலும் வருகின்ற 20ஆம் தேதி மதிமுகவின் எதிர்கால திட்டங்களை வகுப்பதற்காக கூட்டமானது நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்தான் துரைக்கு பொறுப்பு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். இதில் மாவட்ட மாவட்ட செயலாளர்களின் கருத்தை வைத்து தான் முடிவு எடுக்கப்படும். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அடைந்துள்ளது. எனவே திமுக தலைவரும் முதலமைச்சருமான முகஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.