மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பையில் கடந்த புதன்கிழமை வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் கூட்டத்தில் கூறியதாவது. வருவாய்த் துறையில் ஏற்படும் தவறுகள் மூலம் அதிகமாக நிதி இழப்புகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்யும் வகையில் நவீன தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவிகள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்கான தொழில் நுட்ப நிறுவனத்தினர் வேலையில் அமர்த்தப்படுவார்கள்.
இது குறித்து வருவாய்த்துறை செயலர் தருண் பஜாஜ், மத்திய மறைமுக வரிகள் வாரியம் விவேக் ஜோரி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் அதிகாரிகள் அன்றாட பயிற்சியில் கிடைக்கும் யோசனைகளை தினம்தோறும் பணியில் நடைமுறைப்படுத்தினாலே மன அழுத்தத்தை குறைக்கலாம் என அவர் கூறியுள்ளார். இதனை எடுத்து ஜிஎஸ்டி ஊழியர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளை அவர் திறந்து வைத்துள்ளார்.