தமிழகத்தில் கடந்த 2006-2011 ஆண்டு திமுக ஆட்சியில் அனைத்து கிராமங்களிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குட்டைகல் தூர்வாரப்பட்டு கரைகளை சுற்றி தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு நீர்த்தேக்க அமைப்புகள் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு இந்த குட்டைகள் பராமரிக்கப்படாமல் இருந்ததால் தற்போது அனைவரும் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.
இந்நிலையில் குட்டைகளை சீரமைக்கப்பட்டு கரைகளில் மரக்கன்று நட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக சூலூர் வட்டாரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் துவங்கப்பட்டு குட்டைகளை சீரமைப்பு பணி நடந்து வருகிறது. அதைத்தொடர்ந்து அரசூர் முதலிபாளையம், மயிலம்பட்டி மற்றும் காடாம்பாடி ஆகிய கிராமங்களில் குட்டைகளில் உள்ள குப்பைகள் மற்றும் புதர்களை சுத்தம் செய்யப்பட்டு தடுப்பு சுவருக்கு வெள்ளையடிக்கபட்டு வருகிறது.
மேலும் கரைகளில் மரங்கள் நடும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா பொத்தியாம்பாளையத்தில் நடைபெற்று முடிந்த பணிகளை ஆய்வு செய்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஒன்றிய பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் குளங்கள் தூர்வாரப்பட்டால் மழைக்காலத்தில் நீர் தேக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயரம் கூடும் என்று மக்கள் மகிழ்ச்சியாக தெரிவித்து உள்ளனர்.