கரூர் பண்டுதகாரன்புதூரில் ஏப்ரல் 27ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி இலவச பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கரூர் பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி இலவச பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி பண்டுதகாரன் புதூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அருணாச்சலம் விடுத்திருக்கின்ற செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கரூர் மாவட்டம், மண்மங்கலம் பண்டுதகாரன் புதூரில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி ஒரு நாள் இலவச பயிற்சி 27 ம் தேதி வழங்கப்படுகிறது.
மேலும் இந்த பயிற்சியில் நாட்டுக்கோழி இனங்கள், புறக்கடை மற்றும் கூண்டு முறை வளர்ப்பு முறைகள், கொட்டகை அமைப்பு, தீவனம் மற்றும் குடிநீர் பராமரிப்பு, நாட்டுக் கோழிகளைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் வழிமுறைகள் போன்றவை பற்றி பயிற்சி வழங்கப்படுகிறது.
மேலும் கோழி குஞ்சு பொரிக்கும் சாதனம், உபயோகம் மற்றும் பராமரிப்பு, மூலிகை மருத்துவ முறைகள் குடற்புழு நீக்கம், தடுப்பூசி அளித்தல், விற்பனை உத்திகள் மற்றும் பண்ணை பொருளாதாரம் போன்ற தலைப்புகள் பற்றியும் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் நிபுணர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவர்கள் நேரடியாக வரும் 20ஆம் தேதி காலை 10.30 மணிக்குள் வந்து பயிற்சியில் பங்கேற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.