இந்தியாவில் வருகின்ற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன் நிறுவனம் விமான பயணிகளுக்கு தள்ளுபடி விலையில் டிக்கெட் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு டிக்கெட் சலுகையை வழங்குகிறது. அதன்படி 1000 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணிக்க கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அனுமதிக்கிறது. சரியாகச் சொன்னால் 926 ரூபாய்க்கு விமான டிக்கெட் விற்பனை செய்கிறது.
Right to fly என்ற சலுகையின் கீழ் விமான டிக்கெட் கட்டணம் 926 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. இந்த சலுகையின் பலன்களை முழுமையாக பெற வேண்டும் என்றால் ஜனவரி 26ம் தேதிக்குள் டிக்கெட் புக் செய்து விட வேண்டும். இந்த சலுகையின் கீழ் பிப்ரவரி 11ஆம் தேதி முதல் மார்ச் 21 ஆம் தேதி வரையிலான காலத்திற்கு விமான டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும். மேலும் இந்த சலுகை one-way பயணத்திற்கு மட்டுமே பொருந்தும். இந்த சலுகையை உள்நாட்டு பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். சர்வதேச விமான டிக்கெட் உங்களுக்கு இந்த சலுகை கிடையாது என்று அறிவித்துள்ளது.