கூகுள் நிறுவனம் இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தை அளவிடும் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
உலகிலேயே மிகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழும் கூகுள் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை ஒரு பிட்னஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியின் உதவியுடன் நீங்கள் உங்கள் இதயத்துடிப்பை அளவிட முடியும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் எரிக்கும் காலரியையும் அளவிடலாம். ஸ்மார்ட் போன்களில் கேமரா மூலம் இது செயல்படுகிறது. மார்ச் மாதத்திலிருந்து இந்த செயலியை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த செயலி இன்னும் ஸ்டோரில் கிடைக்கவில்லை. ஸ்மார்ட்போன் சென்சாரை பயன்படுத்துவதன் மூலமாக மக்களின் தூரத்தை கணக்கிட முடியும். மேலும் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்பதையும் கண்டறியலாம். உங்கள் பிட்னஸ் தெரிந்து கொள்ளலாம். உங்கள் தொலைபேசி லென்சில் விரல் வைக்க வேண்டும், அப்போது சருமத்தின் நிறம் மாறும். அதன் அடிப்படையில் உங்கள் இதயத் துடிப்பு எவ்வளவு என்பதை கேமரா மூலம் அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் இதயத்துடிப்பு வீதத்தை அளவிட முடியும். உங்கள் சுவாசத்தை அளவிட நீங்கள் கேமராவுக்கு முன்னால் நிற்க வேண்டும். நீங்கள் சுவாசிக்கும்போது கேமரா உங்களை கண்காணித்து உங்கள் சுவாச விகிதம் எவ்வளவு என்பதை கண்டுபிடிக்கும். அதன்மூலம் உங்கள் சுவாச வீதம், துடிப்பு மற்றும் இதயத் துடிப்பு ஆகியவற்றை விரைவாக கண்டறியலாம்.