பாடலாசிரியர் சினேகன் மீது தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பாடலாசிரியரான சினேகன் தன் பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பொதுமக்களிடமிருந்து பணம் வசூலித்து மோசடி செய்வதாக சினேகன் ஆகஸ்ட் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து ஜெயலஷ்மி சினேகன் தன் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருப்பதாக கூறி புகார் அளித்தார். அவரது புகாரையும் போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சினேகன் மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு தடை விதித்து விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.