Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி நீங்க எல்லாம் இப்படி ஓட்டு போடுங்க… தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு ..!!

சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தபால் மூலம் ஓட்டுப்போடும் விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் மூலம் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்காலில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் ஓட்டு போடும் விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தபால் ஓட்டு காண விண்ணப்ப படிவங்களை வழங்கியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, தமிழக சட்டமன்ற தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தேர்தல் ஆணையம் தபால் மூலம் ஓட்டளிக்க அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் தொகுதியில் 2,543 மாற்றுத்திறனாளிகளும், மானாமதுரை தொகுதியில் 3,464 பேரும், காரைக்குடி தொகுதியில் 1,976 பேரும், சிவகங்கை தொகுதியில் 2,662 பேர் என மொத்தம் 10,645 பேர் உள்ளனர். அதேபோல் 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் திருப்பத்தூர் தொகுதியில் 6,820 பேரும், மானாமதுரை தொகுதியில் 5827 பேரும், காரைக்குடி தொகுதியில் 7581 பேரும், சிவகங்கை தொகுதியில் 8,624 பேர் என மொத்தம் 28,852 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி தபால் மூலம் ஓட்டுப்போட விண்ணப்பம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துக்குமார், சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |