பாகிஸ்தானில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கான காரணம் என்ன ..? என பிரதமர் இம்ரான்கான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, பாகிஸ்தானில் தேர்தல் அறிவித்த பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றத்திற்கு ஏன் செல்கின்றனர்.? நாட்டின் முன்னேற்றம் குறித்து சிந்திப்பவர்கள் நாடாளுமன்றத்தில் அல்லாமல் நீதிமன்றத்தில் என்ன செய்கிறார்கள்.? இந்த முறையாவது கனவுகளுடன் இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்குவோம். கடந்த முறை தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து தெரியாமல் போயிருந்தது. தற்போது எங்களுக்கு தெரிந்துவிட்டது. உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைப்பது ஜனநாயகத்துக்கு முரணானது.” என அவர் கூறியுள்ளார்.
Categories