Categories
உலக செய்திகள்

இனி நெட்பிளிக்ஸிலும் விளம்பரம்… விரைவில் அறிமுகம்…? வெளியான தகவல்….!!!!!!

நெட்பிலிக்ஸ் ஒடிடி தளம் விளம்பரங்களுடன் கூடிய சந்தா திட்டத்தை விரைவில் அமல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் பிரபல ஓடிடி தளமாக அறியப்படும் நெட்பிலிக்ஸ் பல்வேறு நாடுகளுடன் சந்தாதாரர்களை கொண்டிருக்கிறது. சர்வதேச திரைப்படங்கள் ஒரு தளத்தில் கிடைப்பதால் நெட்பிலிக்ஸ் தளத்திற்கு தனியாக பயனர்கள் எண்ணிக்கை இருக்கிறது. இந்த சூழலில் இதுவரை விளம்பரங்கள் அற்ற தளமாக இருந்து வந்த netflix விரைவில்  தளங்களை போல் விளம்பரங்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதற்காக விளம்பரங்களுடன் கூடிய சந்தாதாரத் திட்டத்தை அமல்படுத்த இருக்கின்ற  நிறுவனம் மாதாந்திர சந்தா தொகையாக இந்திய மதிப்பில் ரூபாய் 500 முதல் 600 வரை கட்டணமாக நிர்ணயிக்க இருப்பதாக தெரிகின்றது. இந்த வருடத்தின் இறுதிக்குள் உலகின் ஆறுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் சோதனை முறையில் அமல்படுத்தப்படும் இந்த திட்டமானது அடுத்த வருட தொடக்கத்திலும் மேலும் விரிவு படுத்தப்பட இருக்கின்றது. இந்த திட்டத்தின் தொடக்கம் மற்றும் இடைப்பகுதியில் முழு விளம்பரங்கள் வெளியாகும் விதமாக இந்த சந்தா திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இருந்தபோதிலும் இது தொடர்பாக நெட்பிலிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர் தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |