Categories
தேசிய செய்திகள்

இனி பணமெடுக்க நீங்க போக வேண்டாம்… அதுவே வீடு தேடி வரும்… உடனே பதிவு பண்ணுங்க…!!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் டோர் ஸ்டெப் வசதியை பெறுவது எப்படி என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

கொரோனா காலத்தில் மக்கள் அனைவருமே வீட்டிலேயே இருந்து வருகின்றன. மேலும் வீட்டை விட்டு வெளியில் வருவது பாதுகாப்பற்றதாக இருக்கின்றது. அதனால் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்கு மட்டும் வெளியில் செல்ல வேண்டி உள்ளது. அதுவும் பணம் எடுக்கவும் ,மற்ற வங்கி பரிவர்த்தனைகளை செய்வதற்கு வங்கி கிளை அல்லது ஏடிஎம் மையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இது போன்ற சூழலில் வீட்டில் இருந்தவாறே வங்கி சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறுவதற்காக வங்கி சிறந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கித் துறை நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வழங்குகிறது. டோர் ஸ்டெப் சேவையில் ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு பரிவர்த்தனையில் ரூபாய் 20000 மட்டுமே எடுக்க முடியும். இதற்கான சேவை கட்டணமாக பரிவர்த்தனை ஒன்றுக்கு 100 மற்றும் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படும். நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த சேவை 70 வயது மேற்பட்டவர்களுக்கு மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு எந்தவித தடையில்லாமல் கிடைக்கும். கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து மொபைல் நம்பரை கொடுத்தால் அதற்கு ஓடிபி வரும். அதை பதிவிட்டு கோரிக்கை உறுதி செய்வதற்கு உங்கள் பெயர், பாஸ்வேர்டு, இ மெயில் போன்ற பதிவுகளை பதிவிட்டு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். பின்னர் பதிவு செய்வதற்கான ஒப்புதல் செய்தி வரும். உங்களது முகவரியும் அப்டேட் செய்து விட்டால் டோர் ஸ்டெப் வசதியை ஈசியாக பெறலாம்.

Categories

Tech |