Categories
தேசிய செய்திகள்

இனி பணம் எடுக்க….. ATM கார்டு தேவையே இல்லை….. புதிய வசதி அறிமுகம்….!!!!

இனி ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எப்படி எடுப்பது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்,

உலகம் முழுவதும் பல விஷயங்களுக்கு ஆன்லைனுக்கு மாறி வருகிறது. அதே போல் தான் பல வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கக்கூடிய வசதியை அறிமுகப்படுத்தி வருகின்றது.  இதனால் ஏடிஎம் அட்டையை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த முறையில் ஏடிஎம் இயந்திரத்தில் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

அதில் நீங்கள் எடுக்க நினைக்கும் தொகையை உள்ளீடு செய்தால், பரிவர்த்தனைக்காக QR code உருவாக்கப்படும். பின்னர் வாடிக்கையாளர் UPI ஆப்பில் அந்த குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பின் உங்கள் பின் நம்பரை உள்ளீடு செய்து பாதுகாப்பான முறையில் பணம் பெறலாம். ஏடிஎம் கார்டு இல்லாமல் இந்த பணப்பரிவர்த்தனை நடப்பதால் கார்டு ஸ்கிம்மிங், கார்டு குளோனிங் போன்ற மோசடிகளில் இருந்தும் தப்பலாம். ஐசிஐசிஐ, கோடக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி, எஸ்பிஐ ஆகிய வங்கிகள் தற்போது இந்த வசதியை செயல்படுத்தி வருகின்றன.

Categories

Tech |