Categories
தேசிய செய்திகள்

இனி பணம் செலுத்தாமலே ரயில் டிக்கெட்….. எப்படி தெரியுமா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ரயில் பயணிகளுக்காக அதிலும் குறிப்பாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை ஐ ஆர் சி டி சி வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்யும் திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது . தற்போது பல ஆன்லைன் வர்த்தகங்கள் buy now pay laterஎன்ற திட்டம் மூலம் பொருட்களை தேவைப்படும் போது வாங்கிக் கொண்டு அதன் பிறகு ஒரு மாதம் கழித்து பணத்தை கட்டிக் கொள்ளலாம் என திட்டத்தை அமல்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருவது மட்டுமல்லாமல் எந்த வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

தற்போது இந்த திட்டத்தை ஐ ஆர் சி டி சி ரயில் டிக்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளது. பயணிகள் முன்பதிவு செய்யும்போது அவர்களுக்கான பணத்தை கேஷ்- இ நிறுவனம் செலுத்தி விடும். அதன் பிறகு நீங்கள் குறிப்பிட்ட நாளுக்கு பிறகு இஎம்ஐ வசதி அல்லது தவணை முறை மூலம் பணத்தை திரும்ப செலுத்தலாம். இதற்கு எந்தவித கூடுதல் கட்டணமும் கிடையாது.

Categories

Tech |