தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் மூர்த்தி, பத்திரப்பதிவில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க சார்பதிவாளர் மட்டுமல்லாமல் எழுத்தர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எழுத்தர்கள் பதிவு உரிம எண்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பத்திரம் எழுதும் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் கொடுத்துள்ள எண்களையும் பதிவு செய்ய வேண்டும். இதனால் முறைகேடான பத்திர பதிவுகளை தடுக்க முடியும் என்று நம்புகிறோம். மேலும் பத்திரப்பதிவு முறையானது படிப்படியாக எளிமையாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.