நாடு முழுவதும் மருத்துவ மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளில் சேர உழவுத் தேர்வு கட்டாயமாக பட்டு உள்ளது. அதனால் இந்த நுழைவு தேர்வுக்காக மாணவர்கள் தனியாக பயிற்சி மையங்களில் சேர்ந்து பயின்று வருகிறார்கள். இந்த பயிற்சி மையங்களில் நடக்கும் விஷயங்கள் பல மாணவர்களை பாதிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறது. அதனால் ராஜஸ்தான் அரசு இனி பயிற்சி மையங்களில் சேர்வதற்கு மாணவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பயிற்சி மையங்களில் கண்காணிக்க சட்டம் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
பயிற்சி மையங்களில் முதல் இடங்களை பிடித்தவர்களை விளம்பரமூலம் பிரபலப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் செயல்களை தவிர்க்கவும்,மாணவர்கள் அனைவருக்கும் கவுன்சிலிங் மையங்களை அமைக்கவும் தனியாக ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பது தொடர்பான சட்டத்தை அரசு இயற்ற உள்ளது. இதன் மூலமாக பயிற்சி மையங்கள் மட்டுமல்லாமல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் கண்காணிக்கப்படும் எனவும் இதற்கான மசோதா மாநில சட்டசபையில் அடுத்த கூட்டத்தில் அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.