Categories
மாநில செய்திகள்

இனி “பயோமெட்ரிக் முறையில் தேர்வு” TNPSC புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு அரசு தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பாதிப்பு குறைந்துள்ளதால் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சமீபகாலமாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நவீனப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டிற்கு பதில் பயோமெட்ரிக் விரல் ரேகை பதிவு முறையை கொண்டுவர டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. இதன்படி ஆள்மாறாட்டம் தடுக்கப்படும். தேர்வர்கள் தங்கள் விரல் ரேகை பதிவு செய்தால் அதில் உள்ள தகவலின் படி தேர்வரைக்குள் அனுமதிக்கப்படுவர். இதற்கான நடவடிக்கைகள் விரைவில் துவங்க இருப்பதாக அதன் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |