Categories
மாநில செய்திகள்

இனி பல்கலைக்கழகத்தில் “துணைவேந்தர்கள் இப்படி தான் நியமிக்கப்படுவார்கள்”…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!!!

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் போல மேற்கு வங்கத்திலும் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 13 பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக கவர்னருக்கு மட்டுமே உள்ளது.    மேலும் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை தேர்வு செய்யும் போது  பல்கலைக்கழகங்களில் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் தலா ஒருவர் மற்றும் கவர்னர் சார்பில் ஒரு பிரதிநிதி என மூன்று பேர் நியமிக்கப்படுவர்.

இதனை மாற்றும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் வகையிலும் தேவைப்பட்டால் துணைவேந்தரை நீக்கம் செய்யவும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையில் இரண்டு மசோதாக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதேபோல் தற்போது மேற்கு வங்கத்திலும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிப்பதற்கு யுஜிசி விதிகளில் இடமில்லை என தமிழக கவர்னர் ஆர்.என். ரவி விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |