நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களை வெயிலில் அமர வைத்து படிக்க வைக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
வழக்கமாக பள்ளி மாணவர்களை வகுப்பறையை தாண்டி பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே அமர்த்தி பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இனி இதனை எந்த பள்ளிகளிலும் செய்யக்கூடாது என உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களை வெயிலில் அமர்த்தி படிக்க வைப்பது முதலில் அவர்களின் நலத்திற்கு கேடு எனவும் மறுபிறம் மாணவர்கள் வெளியில் அமர்ந்து படிக்கும் போது அவர்களின் கவனம் சிதறுவதால் குழந்தைகளுக்கு கல்வியை வகுப்பறைக்குள்ளேயே கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது .