Categories
மாநில செய்திகள்

இனி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டாயம்…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பள்ளி கல்லூரி மாணவர்களில் தகுதியானவர்களுக்கு 100% கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மாணவர்கள் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றுவது கல்வி நிறுவனங்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் பரண்டு வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டும். நோய் பரவலுக்கு வழிவகை செய்யாமல் பள்ளி கல்லூரி வளாகங்கள் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நாள்தோறும் வெப்பமானி மூலம் காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |