தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவரான திண்டுக்கல் ஐ.லியோனி மரியாதை நிமித்தமாக நேற்று முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக எனக்கு வாய்ப்பளித்த முதல்வர் அவர்களுக்கு நன்றி. இன்னும் நிறைய அளவில் பள்ளி குழந்தைகள் பல புதுமைகளை படைக்க தயாராக இருக்கிறேன். ஏழை, எளிய மாணவர்களும் கல்வியை ஒரு சுமையாக கருதாமல் பயில வேண்டும்.
மேலும் மக்கள் அனைவரும் “ஒன்றிய அரசு:” என்ற வார்த்தையை சிறப்பாக பயன்படுத்த தொடங்கி விட்டனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்படும் போது மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையை புத்தகங்களில் அச்சிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.