Categories
உலக செய்திகள்

இனி பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக …. தாய்லாந்து அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய தாய் லாந்து அரசு முடிவெடுத்து இருக்கிறது.

உலகளவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வளர்ந்த நாடுகளிலும் பெண்கள் மீதான அத்துமீறல்கள் அதிகளவில் இருக்கிறது. இதன் காரணமாக தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்று குரல்கள் ஒலித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா, அமெரிக்கா, தென் கொரியா நாடுகளிலுள்ள சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ள தண்டனை முறையை தாய்லாந்து கையில் எடுத்திருக்கிறது. அதாவது பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படுவதே அந்த முறையாகும்.

இதற்கென இயற்றப்பட்ட மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தாய்லாந்து பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு இருந்தாலும், அங்கு பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகிறது. சென்ற 2013-2020 வருடங்களுக்கு இடையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 16,413 பாலியல் குற்றவாளிகளில் 4,848 பேர் மீண்டும் பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது. இதனால்தான் தாய்லாந்து அரசு இந்த முடிவை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மசோதாவின் கீழ் மன நல நிபுணர், உள் மருத்துவ நிபுணரின் ஒப்புதலுடனும் பாலியல் குற்றவாளியின் ஒப்புதலுடனும் மட்டுமே மருந்து பரிந்துரைக்கப்பட்ட வேண்டும்.

மீண்டுமாக குற்றம் செய்யும் அபாயத்திலுள்ள சில பாலியல் குற்றவாளிகளுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கும் ஊசிகளைப் பெறுவதற்கான விருப்பம் வழங்கப்படலாம். அதாவது குறுகிய சிறைவாசத்துக்கு ஈடாக, அவர்கள் 2 மருத்துவர்களின் ஒப்புதலை பெற்று இருந்தால் இந்த தண்டனை அளிக்கப்படலாம். குற்றவாளிகள் தண்டனையை அனுபவித்த பின் (அல்லது) மறு வாழ்வில் உள்ளவர்களுக்கும் இந்த நடவடிக்கை பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மசோதாவில் குற்றவாளிகள் 10 ஆண்டுகள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் மின்னணு கண்காணிப்பு வளையல்களை அவர்கள் அணியவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |