கேரளாவில் பாலக்காடு – திருச்சூர் செல்ல மலையை குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்பட்டது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் குதிரன் என்ற பகுதியில் மலையை குடைந்து திருச்சூருக்கு விரைவாக செல்லும் 2 சுரங்கப்பாதை பணி நடைபெற்று வந்தது. முதல் சுரங்கபாதையாக பாலக்காட்டில் இருந்து திருச்சூருக்கு விரைவாக செல்லும் முதல் சுரங்கப்பாதை பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று முடிந்த நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. இந்த சுரங்கப் பாதையின் வழியாக பாலக்காட்டில் இருந்து திருச்சூர்க்கும், திருச்சூரில் இருந்து பாலக்காட்டுக்கும் வாகனங்கள் தனித்தனியே பிரித்து செல்ல அனுமதிக்கப்பட்டன.
இந்த நிலையில் இரண்டாவது சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அந்த பணியும் தற்போது நிறைவடைந்து அதை கேரளா திருச்சூர் மாவட்ட கலெக்டர் ஹரிதா வி. குமார் நேற்று மாலை திறந்து வைத்தார். திருச்சூரில் இருந்து பாலக்காட்டிற்கு செல்லும் வாகனங்கள் முதல் சுரங்க பாதை வழியாகவும், பாலக்காட்டில் இருந்து திருச்சூர் செல்லும் வாகனங்கள் இரண்டாம் சுரங்கப் பாதை வழியாகவும் செல்ல அனுமதிக்கப்பட்டன.